ஐபிஎல் 2021 | 54 ஆவது போட்டி | ராஜஸ்தானை படுதோல்வி அடையச் செய்த கொல்கத்தா அணி!
Shivam Mavi Celebrates The Wicket Of Sanju Samson
ஐபிஎல் 2021-இன் 54 ஆவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் தனது நான்காவது இடத்தை ஏறத்தாழ தக்க வைத்துக் கொண்டது.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கில் 56(44) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறி கொடுத்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர். கொல்கத்தா சார்பில் ஷிவம் மாவி 3.1 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
ஆரம்பத்தில் இருந்தே பிளேயிங் 11-யை தேர்வு செய்வதிலும் சரி, குறிப்பிட்ட ஓவர்களுக்கு பவுலர்களை தேர்வு செய்வதிலும் சரி தொடர்ந்து சொதப்பி வந்தார் சஞ்சு சாம்சன். ஓரளவுக்கு ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெறும் வாய்ப்புகள் அணிக்கு தேடி வந்த போதெல்லாம் அதை நிச்சயமாக வீண்டித்தார் என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் கடைசி மேட்சில் இவ்வளவு அசாதாரணமாய் தோற்று மும்பையின் வாய்ப்பையும் காலி செய்தார்.
“ இனி கொல்கத்தா உள்ளே, மும்பை கிட்ட தட்ட வெளியேறி விட்டது என்றே சொல்ல வேண்டும். தான் மட்டும் தோற்றது இல்லாமல் இன்னொரு அணியையும் சேர்த்து வெளியே தள்ளி இருக்கிறது ராஜஸ்தான் அணி “