ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது கொல்கத்தா அணி!
Shubman Gill Celebrating His Half Century Against SRH
ஐபிஎல் 2021-இன் 49 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!
முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா சார்பில் வருண், மாவி, சவுத்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி,19.4 ஓவர்களில் போராடி இலக்கை துரத்திப் பிடித்தது.
கொல்கத்தா சார்பில் சுப்மான் கில் 57(51) ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றதன் மூலம் நான்காவது இடத்தை தற்போதைக்கு தனக்கென தக்க வைத்துக்கொள்கிறது.
“ நான்கு அணிகள் நான்காவது இடத்திற்கு போராடிய நிலையில், இன்றுபெங்களுருடனான போட்டியில் பஞ்சாப் தோற்றதன் மூலம் பஞ்சாப் அந்த போராட்டத்தில் இருந்து சற்றே பின்னடைவை சந்தித்து இருக்கிறது. தற்போது ஹைதரபாத்துடனான போட்டியில் கொல்கத்தா வென்ற நிலையில், இந்த ப்ளே ஆப் போராட்டத்தில் மற்ற நான்கு அணிகளைக் காட்டிலும் ஒரு அடி முன்னெடுத்து வைத்திருக்கிறது மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி “