உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இருந்து கே எல் ராகுல் விலகல்!
KL Rahul Out Of WTC Final Idamporul
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார் கே எல் ராகுல்.
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் கே எல் ராகுல் தற்போது மருத்துவ ஆலோசனையின் கீழ் இருப்பதால் மீதி இருக்கும் ஐபிஎல் தொடரையும், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியையும் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. அவருக்கு பதில் சூர்ய குமார் யாதவை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம்.
“ பும்ரா, கே எல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களம் இறங்குவது இந்திய அணிக்கு பின்னடவாக இருந்தாலும் கூட இந்திய அணியில் மாற்று வீரர்களுக்கு பஞ்சமில்லை என்பதால் அது கொஞ்சம் தைரியமளிக்கிறது “