முதல் ஒலிம்பிக்கிலேயே இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த லோவ்லினா – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 64-69 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா, சீன தைபேயின் நின்-சின் சென்-ஐ 4-1 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 64-69 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் லோவ்லினாவும், சீன தைபேயின் நின்-சின் சென்-ஐயும் மோதினர். தொடக்கம் முதலே தனது முழு ஆக்ரோசத்தையும் காட்டிய லோவ்லினா 30-27,29-28,28-29,30-27,30-27 என்ற புள்ளிக்கணக்கில் நின்-சின் சென்-ஐ வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
23 வயதே ஆன அசாமின் லவ்லினா முதல் ஒலிம்பிக்கிலேயே அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்து சாதித்திருக்கிறார். மேலும் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு லோவ்லினாவால் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் கிடைக்கிறது
” இளம்புயலின் இந்த வேட்கை வெண்கலத்தோடு நின்று விடாமல் தங்கத்தை நோக்கி நகரட்டும் ”