மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கிறாரா மகேந்திர சிங் தோனி?
MS Dhoni Back To Indian Cricket Team
தொடர் தோல்விகளை அடுத்து மீண்டும் எம் எஸ் தோனியை இந்திய அணிக்குள் களம் இறக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணி தொடர்ந்து பெரிய தொடர்களில் சொதப்பி வருவதால், பிசிசிஐ மீண்டும் தோனியை அணிக்குள் களம் இறக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது ஆலோசகராவும் இருக்கலாம் இல்லை அதற்கும் மேலாக அணியின் தலைவராகவும் இருக்கலாம் என்று இரண்டு விதமான கருத்து நிலவி வருகிறது.
“ ஒரு அணியை உருவாக்கி அதை அப்படியே களத்துக்கு தயாராக்குவது தான் தோனியின் கேப்டன்சி, ஆனால் தற்போதைய இந்திய அணியோ நாலா புறம் என சிதறி கிடக்கிறது. அதை ஒன்றிணைக்க தோனி எந்த ரூபத்தில் களம் இறங்கினாலும் ரசிகர்களுக்கு மகிழ்வே “