ஐபிஎல்-லின் ஆண்டை அணிகளுக்கு ஆப்பு வைக்க வருகிறதா ’மேன்செஸ்டர் யுனைடெட்’?
Manchester United Team Shown Interest In Buying IPL Team
கால்பந்து உலகின் ஜாம்பவான் அணியாக கருதப்படும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம் புதிதாக உருவாக்கப்பட்ட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விளைவதாக ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கால்பந்து உலகின் ஜாம்பவன்களாக திரியும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம், புதியதாக உருவாக்கப்பட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக அக்டோபர் 5 வரை இருந்த டெண்டர், அக்டோபர் 10 வரை நீட்டிப்பட்டுள்ளது.
“ கால்பந்து உலகில் பெரிய பெரிய ஜாம்பவான் அணிகளை தனது துல்லியமான டாக்டிஸ்சுடன் தோற்கடித்திருக்கும் ‘மான்செஸ்டர் யுனைடெட்’ அணியால் , இங்கிருக்கும் ஐபிஎல்-லின் ஆண்டை அணிகளாக கருதப்படும் மும்பை, சென்னை அணிகளின் பலத்தை எதிர்கொள்ள முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “