MCL | Match No 1 | TSK v LKR | ‘முதல் போட்டியிலேயே வெற்றி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அசத்தல்’
Major Cricket League Match No 1 TSK VS LKR TSK Won By 69 Runs Idamporul
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக்கின் முதல் போட்டியில் லாஸ் ஏஞ்சல் நைட் ரைடர்ஸ் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்.
முதலில் ஆடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கான்வே 55(37) மற்றும் மில்லரின் 61(42) அதிரடியால் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியில் ரஸ்சல் 55(34) தவிர யாரும் ஜொலிக்காததால் 112 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
“ முதல் போட்டியிலேயே 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் யெல்லோவின் பலத்தை அமெரிக்காவிலும் நிரூபித்து இருக்கிறது “