ஐபிஎல் 2021 | இன்று நடக்கும் இரண்டாம் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!
MI vs RCB IPL 2021 39 th Match Starts Today
ஐபிஎல் 2021-இன் 39 ஆவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியானது, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த போட்டியானது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக 7:30 மணி முதல் ஒளிபரப்பப்படும்.
இதுவரை நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில் 17 -இல் மும்பையும், 11 போட்டியில் பெங்களூரு அணியும் வென்றிருக்கின்றன. ஐபிஎல் இரண்டாவது கட்டம் ஆரம்பித்ததில் இருந்தே இரண்டு அணிகளுக்கும் ராசி இல்லை. தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. ஆறவது இடத்தில் இருக்கும் மும்மை அணிக்கு இன்றைய போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலை. பெங்களுரு அணியும் முதல் நான்கு இடத்திற்குள் நிலைத்து நிற்க வெற்றியை நோக்கி போராடும், ஆக மொத்தத்தில் இன்றும் ஒரு பரபரப்பான ஆட்டம் இருக்கிறது ஐபிஎல் ரசிகர்களுக்கு!
Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli (c), Devdutt Padikkal, KS Bharat (wk), Glenn Maxwell, AB de Villiers, Tim David, Wanindu Hasaranga/Kyle Jamieson, Shahbaz Ahmed, Harshal Patel, Yuzvendra Chahal, Siraj
Mumbai Indians Probable XI: Rohit Sharma (c), Quinton de Kock(w), Suryakumar Yadav, Ishan Kishan, Kieron Pollard, Hardik Pandya/Saurabh Tiwary, Krunal Pandya/Anukul Roy, Trent Boult, Adam Milne, Jasprit Bumrah, Rahul Chahar
” கேப்டன் வெர்சஸ் துணை கேப்டன், கோலி வெர்சஸ் ரோஹிட் பார்க்கலாம், எந்த பக்கம் வெற்றி செல்கிறது என்பதை இரவு 7:30 வரை பொறுத்திருந்து பார்க்கலாம் “