ஐபிஎல் 2021 | பஞ்சாப் அணியை வென்றது மும்பை!
Tiwary Blasting Innings Against Punjab 42th Match Of IPL 2021
ஐபிஎல் 2021-இன் 42 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 42(29) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. மும்பை சார்பில் திவாரி 45(37) ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
தொடர் தோல்விக்கு பின்னர் இந்த வெற்றியின் மூலம் ஆறுதல் அடைந்திருக்கிறது ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி. ஒரு காலத்தில் சேசிங், டிபெண்டிங் என்று எல்லாவற்றிலும் கலக்கும் மும்பை அணி இன்று 135 ரன்களைக் கூட போராடி தான் சேஸ் செய்தது.
“ பார்க்கலாம், இனியாவது மும்பை இந்தியன்ஸ் தொடர் வெற்றிகளை பெற்று, இந்த ஐபிஎல்-லின் ப்ளே ஆப்-யை உறுதி செய்யுமா என்று..! ”