ஐபிஎல் 2021 | ராஜஸ்தானை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
ஐபிஎல் 2021-இன் 51 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி!
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் கோர்டர் நைல் 4 விக்கெட்டுகளும், நீஷம் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதற்கு அடுத்து ஆடிய மும்பை அணி 8.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது.
மும்பை சார்பில் இஷான் கிஷன் 25 பந்துகளில் 5 போர், 3 சிக்ஸ் உட்பட 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று மும்பையின் வெற்றிக்கு உறுதியாக நின்றார். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ப்ளே ஆப் களத்தில் மீண்டு வந்திருக்கிறது ரோஹிட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
“ கொல்கத்தா தொடர்ந்து நான்காவது இடத்தில் இருந்தாலும் அடுத்து ஒவ்வொரு அணிகளுக்கும் இருக்கிற ஒவ்வொரு போட்டி எதையும் மாற்றக்கூடும் என்பதில் ஐயமில்லை. கொல்கத்தாவா, மும்பையா, ராஜஸ்தானா, பஞ்சாபா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் “