காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் முகம்மது ஷமி!
Mohammed Shami Ruled Out Of T20 WC Due To Injury Idamporul
இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் முகம்மது ஷமி காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார்.
வருகின்ற ஜூன் மாதம் டி20 உலக கோப்பை துவங்க இருக்கும் நிலையில் கணுக்கால் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் முகம்மது ஷமி உலக கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஆன ஷமி விலகி இருப்பது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக தான் இருக்கும்.
“ யாராலும் நிரப்ப முடியாத ஷமிக்கான இடத்தை யாரைக் கொண்டு பிசிசிஐ நிரப்ப போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “