’Definitely Not’ என்பதை சூசகமாக சொன்ன மகேந்திர சிங் தோனி!
Definitely Not Says Dhoni Idamporul
ஓய்வு குறித்த கேள்விக்கு ‘Definitley Not’ என்பதை மீண்டும் சூசகமாக கூறி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி.
லக்னோவுடனான விளையாட்டின் போது நிரூபர் ஒருவர் ஓய்வு குறித்த கேட்ட கேள்விக்கு, ‘என்னுடைய ஓய்வை நீங்கள் தான் முடிவு செய்து இருக்கிறீர்கள், நான் இல்லை’ என்று தோனி கூறி இருப்பது தோனி அடுத்த வருடமும் சென்னை அணிக்கு கேப்டனாக தொடர இருப்பதை உறுதி செய்து இருக்கிறது.
இன்னமும் களத்தில் நாலா பக்கமும் சிக்ஸர்களை பறக்க விடுவதும், அந்த அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத வீரர்களை திறம்பட வழிநடத்துவதும் என, தோனி இன்னமும் அதே பார்மில் தான் இருக்கிறார். அவர் எத்தனை வயது வரை ’Definitely Not’ சொன்னாலும் அவரது ரசிகர்கள் படை அதை வரவேற்க தான் செய்யும்.
“ இன்னமும் அதே வேகத்துடன் செயல்படும் தோனியை பார்க்கும் போது வயதானாலும் சிங்கம், சிங்கம் தானே என்ற பழமொழி தான் நியாபகத்திற்கு வருகிறது “