எம் எஸ் தோனி தான் என் ஆதர்ச நாயகன் – இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா
Dasun Shanaka Says MS Dhoni Is My Idol Idamporul
மகேந்திர சிங் தோனி தான் என் ஆதர்ச நாயகன் என்று இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இலங்கை அணியின் கேப்டனாக இருக்கும் தசூன் சாணக்கா அளித்த பேட்டி ஒன்றில், தலைமைப் பொறுப்பை பொறுத்த வரை என் ஆதர்ச நாயகன் என்றால் அது கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். இங்கு பலருக்கும் அவர் தான் ஆதர்ச நாயகன். அவரைப் போல ஆக முடியாது. ஆனால் அவரிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
” கேப்டன் பொறுப்பை விட்டு விட்டு, அணியில் இருந்து ஓய்வு பெற்று வருடங்கள் பல ஆனாலும் கூட இன்னும் பலருக்கும் ஆதர்ச நாயகனாக தோனி இருக்கிறார் என்பது ஆச்சரியங்களே “