காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகினார் நீரஜ் சோப்ரா!
Neeraj Chopra Quit From Common Wealth 2022
காயம் காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக்கில் தங்கம், உலக அத்லெட்டிக் சாம்பியன்சிப்பில் வெள்ளி என்று கலக்கிய நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மருத்துவர் ஒரு மாதம் ஓய்வில் இருக்க சொன்னதால் மட்டுமே காமன்வெல்த்தில் இருந்து விலகி இருப்பதாக நீரஜ் தகவல் தெரிவித்து இருக்கிறார்.
“ இந்தியாவின் நட்சத்திர நாயகன் காமன்வெல்த்தில் இருந்து விலகி இருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது “