ஈட்டி எறிதல்: முதல் எறிதலிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீராஜ் சோப்ரா- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தனது முதல் எறிதலிலேயே 86.65 மீட்டர் எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீராஜ் சோப்ரா.

முன்னால் தங்க பதக்க வெற்றியாளரும், உலகின் தலை சிறந்த வீரருமான ஜோஹன்னஸ் வெட்டரே தனது மூன்றாவது எறிதலில் தான் தகுதி புள்ளியை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் போது, 23 வயதே ஆன இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா, தனது முதல் எறிதலிலேயே 86.65 மீட்டர் எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் தகுதி பெற்ற வீரர்களுள் முதல் இடத்தில் இருக்கிறார் இந்திய வீரர் நீராஜ் சோப்ரா.

தனிநபர் பிரிவில் இதற்கு முன் அபினவ் பிந்த்ரா மட்டுமே (துப்பாக்கி சுடுதல்) தங்கம் வென்றிருந்த நிலையில் அதற்கு பிறகு அதிகபட்சமாக இந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வெல்லும் வாய்ப்பை கொண்டிருக்கிறார் இந்த நீராஜ் சோப்ரா.

” சுற்றி சிறுத்தைகளும் சிங்கங்களும் சூழ்ந்து இருக்கையில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி அதற்கு மத்தியில் நின்று அதனுடன் போட்டி போட்டு அதனை வென்றிருக்கிறதெனில் அது நிச்சயம் தங்கத்திற்கு தகுதியானது தானே” 

About Author