பாக்குறதுக்கு தான் சைலண்ட், ஆனா ஐசிசி டூர்னாமெண்ட்னா அடி ஒன்னு ஒன்னும் இடி மாறி இருக்கும்!
நியூசிலாந்து அணி, இந்த அணியை பெரிய பெரிய டூர்னாமெண்ட்களில் யாரும் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது, சைலண்டாக சம்பவம் செய்ய கூடிய அணி என்றே சொல்லலாம்.
அதாவது இந்த அணி ஐசிசி டூர்ணாமெண்ட்களுக்கு முன்னதாக வரைக்கும் சைலண்ட் ஆக இருக்கும். ஆனால் ஐசிசி டூர்ணாமெண்ட் என்று வந்து விட்டதும் ஒரு அசாத்திய பவரால் ஆட்கொள்ளும் பாருங்கள் அது தான் நியூசிலாந்து. உதாரணத்திற்கு 2019 உலக கோப்பையை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய காலக்கட்டத்தில் இந்தியா ஒரு அசைக்க முடியாத அணி. லீக் போட்டிகளில் கூட 9 போட்டிகள் விளையாடி ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டு இருக்கும்.
நியூசிலாந்து அதே டூர்னாமெண்ட்டில் 9 போட்டிகள் விளையாடி ஐந்தில் மட்டுமே வெற்று பெற்று நான்காவது இடத்தில் இருக்கும். செமி பைனலில் நியூசிலாந்து தான் இந்தியாவை சந்திக்கிறது என்னும் போது ரசிகர்கள் சற்றே கொண்டாட்டத்தில் இருந்தனர். டம்மி டீம் தான் அடிச்சு எப்படியாச்சு பைனல் போய் கப் அடிச்சிடலாம் என்ற எண்ணம் தான் ரசிகர்கள் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
ஆனால் களத்தில் நடந்ததே வேறு, அதுவரை ஏதோ சாதுவாக விளையாடிக் கொண்டு இருந்த நியூசிலாந்து அன்று மட்டும் ஆக்ரோஷம் காட்டியது. இந்தியாவிற்கு 239 ரன்கள் தான் இலக்கு நிர்ணயித்து இருக்கும். ஆனால் அதற்கு பின் பவுலிங்கில் சொறுகு சொறுகு என்று சொறுவியிருக்கும். இந்தியாவின் முதல் மூன்று நட்சத்திர பேட்ஸ்மேன்களான ராகுல், ரோஹிட், விராட் என மூவருமே 1 ரன்களில் அவுட் ஆகி வெளியேறி இருப்பர்.
அதற்கு பின் வந்த மிடில் ஆர்டர்கள் கொஞ்சம் தாக்கு பிடித்தாலும் கூட, நியூசிலாந்து அணியின் வியூகங்களால் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோற்றுப் போய் இருக்கும். இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியை திணறடித்து தான் அவர்களை கோப்பை பக்கமே செல்ல விட்டு இருக்கும். இதே நியூசிலாந்து அணி தான், 2019-21 காலக்கட்டத்தில் ஆன ஐசிசி டெஸ்ட் சாம்பியன்சிப்பிலும் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கும்.
“ பொதுவாகவே சைலண்டாக சம்பவம் செய்யக் கூடிய அணிகளுள் பெயர் போனது நியூசிலாந்து, ஐசிசி டூர்னாமெண்டுகள் என்று வந்து விட்டால் களத்தில் ஆடும் 11 பேரும் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள், அது தான் நியூசிலாந்து, நிச்சயம் இந்த டி20 உலக கோப்பையிலும் நியூசிலாந்து அணியின் சம்பவம் இருக்கும் “