NZ Vs PAK | போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து அணி!
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அணியின் பாதுகாப்பு கருதி முதல் போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக, போட்டி மற்றும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
பாகிஸ்தான், ராவல் பிண்டியில் தொடங்க இருந்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, அணியின் பாதுகாப்பு கருதி நியூசிலாந்து அணி விலகியதால் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள், அணி மற்றும் அணியின் வீரர்களின் பாதுகாப்பு கருதி தொடரிலிருந்து விலகுமாறு உத்தரவிட்டதின் பேரிலேயே நியூசிலாந்து அணி விலகியதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் வந்து இறங்கிய நியூசிலாந்து அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை முறித்து விட்டு மறுபடியும் விமானத்தில் ஏறி நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
“ பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் உறுதி செய்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அறிக்கை விட்ட போதும் கூட, நியூசிலாந்து அமைச்சகம் அதை ஏற்காமல் அணியை நாடு திரும்ப சொன்னது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிதும் ஏமாற்றத்தை அளிப்பதாய் இருப்பதாக தெரிவித்து வருகின்றன “