அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது தான் ரோஹிட் செய்த மிகப்பெரிய தவறு – சச்சின்
Biggest Mistake Is Ashwin Not Taken In Sqaud Says Sachin Idamporul
அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது தான் ரோஹிட், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பில் செய்த மிகப்பெரிய தவறு என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின், ரோஹிட் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காமல் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டார். எந்த கன்டிசனிலும் சிறப்பாக விளையாடும் திறன் பெற்ற ஒரு பவுலரை அணியில் எடுக்காவிடில் அதன் முடிவுகள் இவ்வாறே இருக்கும் எனவும் சச்சின் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
” முடிவுகளை தவறாக எடுத்துவிட்டு, அதற்கு பின் தோல்விக்கான காரணங்களை அடுக்குவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என ரசிகர்களும் இணையத்தில் ரோஹிட்டை பயங்கரமாக சாடி வருகின்றனர் “