தன் கோல்டன் ஸ்லாம் கனவை தகர்த்தவரை யு.எஸ்.ஓபனில் பழி தீர்த்த ஜோகோவிச்!
யு.எஸ்.ஓபன் அரையிறுதியில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை 3-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
யு.எஸ் ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், தனது ஒலிம்பிக் தங்க கனவை தகர்த்த ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர் கொண்டார். நீண்ட நேரம் நீடித்த இந்த பரபரப்பான போட்டியில் 4-6,6-2,6-4,4-6,6-2, என்ற புள்ளி கணக்கில் ஜோகோவிச், ஸ்வெரெவ்வை தோற்கடித்து தன் கோல்டன் ஸ்லாம் கனவை தகர்த்தவரை பழிக்கு பழி தீர்த்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
ஏற்கனவே இந்த வருடத்தில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என்று மூன்று கிராண்ட்ஸ்லாம்களை கைவசம் வைத்திருக்கும் ஜோகோவிச், யு.எஸ்.ஓபன் இறுதி போட்டியிலும் வென்றால் ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பெற்ற இரண்டாம் வீரர் என்ற பெருமை ஜோகோவிச் பெறுவார். இதற்கு முன்பு 1969-இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் பிளேயர் ராட்னி ஜியார்ஜ் லாவர் மட்டுமே ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த யு.எஸ். ஓபனை ஜோகோவிச் கைப்பற்றினால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 21 கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார் ஜோகோவிச். இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் டேனியல் மெட்விடேவை எதிர் கொள்ள இருக்கிறார் ஜோகோவிச். இதுவரை இவர்கள் இருவருக்குமான ஒன்பது போட்டிகளில் 5-3 என்ற கணக்கில் ஜோகோவிச்சே முன்னிலை வகிக்கிறார். என்றாலும் போட்டியின் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறும் ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்.
“ ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் என்ற பட்டத்தோடு இந்த வருடத்தை இனிதே நிறைவு செய்ய செர்பிய வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு வாழ்த்துக்கள் “