ராணுவ மைதானத்தில் பொறிக்கப்பட்ட தடகள வீரரின் பெயர்!
ஊட்டி வெலிங்டன் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் ஸ்டேண்ட்ஸ் ஒன்றுக்கு, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர் மற்றும் ராணுவ சுபேதாரான ஆரோக்ய ராஜிவ் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் திருச்சியை சேர்ந்த ஆரோக்ய ராஜிவ், ரியோ ஒலிம்பிக் மற்றும் தற்போதைய டோக்கியோ ஒலிம்பிக் என்று தொடர்ந்து இரு முறை ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் (400*4) பங்கேற்றிருந்தார். 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் ஆரோக்ய ராஜிவ் தடகளத்தில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை பெருமைப் படுத்தும் வகையில் ஊட்டி வெலிங்டனில் உள்ள தங்கராஜ் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் ஸ்டேண்ட்ஸ் ஒன்றுக்கு ஆரோக்யராஜிவ் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
“ இது தன்னை ஊக்கப்படுத்தும், என்னை மென்மேலும் இந்த தடகளத்தில் உயர்வதற்கு தூண்டும் என்று ஆரோக்ய ராஜிவ் தனது கருத்துக்களை உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் “