ஒரு தனியார் வாரியத்தை மதிக்கின்ற அளவிற்கு கூட எங்கள் நாட்டு வாரியத்தை பிறநாட்டு வாரியங்கள் மதிப்பதில்லை- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
நியூசிலாந்து, இங்கிலாந்து என்ற இரண்டு நாடுகளின் வாரியங்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான தொடரை ரத்து செய்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது டெஸ்டை கேன்சல் செய்து ஐபிஎல் விளையாட அனுமதித்து இருக்கும் பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், எங்கள் வாரியத்தை மதித்து எங்கள் அணியுடன் விளையாட மறுப்பது ஏன் என்று கேள்விகளை முன் வைக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் போட்டியையும் தொடரையும் ரத்து செய்து விட்டு பாகிஸ்தானை விட்ட கிளம்பிய நியூசிலாந்து அணி, தொடரை ரத்து செய்து அறிக்கை விட்ட இங்கிலாந்து அணி என்று இரண்டு அணி வாரியங்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் விளையாட மறுத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கலங்கடித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்த போதும் கூட வாரியங்கள் விளையாட மறுத்திருப்பது எந்தவகையில் நியாயமாகும் என்று பிற நாட்டு வாரியங்களை கடுமையாக சாடியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
“ ஒரு நாட்டின் பாதுகாப்பினை சாடி அந்த நாட்டின் திறமைகளை அவமதிப்பது என்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. ஐபிஎல்லை மதிக்கும் அளவிற்கு கூட எங்கள் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை எந்த நாடுகளும் மதிக்காதது ஏன் என்ற பாகிஸ்தான் வாரியத்தின் கேள்வி நமக்குள்ளும் ஒரு நியாயத்தை தூண்டுவதாகவே அமைகிறது. “