இன்று முதல் தொடங்குகிறது பாராலிம்பிக்ஸ்!
ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தான் முடிந்த நிலையில் தற்போது பாராலிம்பிக்ஸ் டோக்கியோ
-வில் தொடங்க இருக்கிறது. இதில் ஒட்டு மொத்தமாக 4500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் பங்கேற்க இருக்கின்றனர். தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கொடி அணி வகுப்பு நடத்த இருந்த நிலையில் அவர் கொரோனோ சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் டெக் சந்த் இந்திய கொடியை ஏந்தும் வாய்ப்பை பெற்றார்.
இன்று தொடங்கும் பாராலிம்பிக்ஸ் செப்டம்பர் 5 வரை நடைபெற இருக்கிறது. பாராலிம்பிக்ஸ்சில் இந்தியா இதுவரை 12 பதக்கங்கள் வென்றுள்ளன. அதில் நான்கு தங்கம் நான்கு வெள்ளி நான்கு வெண்கலங்கள் அடங்கும். 2016 ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக்ஸ்சில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் அதுவே ஆகும்.
“ கொடி அணிவகுப்பு முடிந்து போட்டி தொடங்கியதும் கொடிகளை கீழ் இறக்கிடாமல், தினமும் உலக அரங்கில் இந்திய கொடியை ஏற்றி தினமும் தேசிய கீதம் அங்கு ஒலிக்கும்படி
செய்திடுங்கள் “