ஒலிம்பிக்கிலியே ஒரே பைனல் வைத்து தான் பதக்கம் கொடுக்கிறார்கள் – பாட் கம்மின்ஸ்
Pat Cummins About Rohit Statement Idamporul
WTC இறுதிபோட்டியை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றினால் நன்றாக இருக்கும் என ரோஹிட் கூறிய கருத்துக்கு பாட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியிடம் WTC இறுதிபோட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர், ரோஹிட் அளித்த பேட்டியில் WTC இறுதிபோட்டியை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்ற கோரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒலிம்பிக்கிலேயே ஒரே பைனல் வைத்து தான் பதக்கம் கொடுக்கிறார்கள் என்று பதிலடி கொடுத்து இருக்கிறார்.
“ எத்தனை ஆட்டம் வைத்தாலும் சிறப்பாக விளையாடுபவர்களே ஜெயிக்க போகிறார்கள், அது ஒரு ஆட்டமாக இருந்தால் என்ன மூன்று ஆட்டமாக இருந்தால் என்ன கிரிக்கெட் ரசிகர்களும் ரோஹிட் கருத்தை ட்ரோல் செய்து வருகின்றனர் “