PayTm T20 Trophy | நியூசிலாந்தை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
Paytm T20 Trophy 3rd T20 India Win Against NewZealand
PayTm டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து அதிரடியாக தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ரோஹிட் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 111 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து சார்பில் கப்தில் 51(36) தவிர யாரும் பெரிதாய் சோபிக்கவில்லை. இந்திய அணி சார்பில் அக்ஸர் பட்டேல் மூன்று ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று இந்திய அணி பேடிஎம் ட்ராபியை தன்வசப்படுத்தி இருக்கிறது.
“ இந்திய அணியின் டி20 உலககோப்பை கனவை தகர்த்த நியூசிலாந்து அணியை இந்த தொடரின் மூலம் பழி தீர்த்து இருக்கிறது இந்திய அணி “