ஐபிஎல் 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பஞ்சாப்!
ஐபிஎல் 2021-இன் 42 ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல்-லின் இரண்டாவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி, கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி 07:30 மணியளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படும்.
இதுவரை நேருக்கு நேர் நடந்த 27 போட்டிகளில், 14 போட்டிகளில் மும்பை வென்று, மும்பையே முன்னிலையில் இருந்தாலும், இரண்டாவது கட்ட ஐபிஎல்-லில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருக்கிறது மும்பை அணி. பஞ்சாப் அணியும் ஒரு நிரந்தர அணியை தேர்வு செய்ய முடியாமல் சீசன் முடியும் இந்நேரத்திலும் குழப்பத்திலேயே இருக்கிறது. இது தான் இவ்விரு அணிகளின் தற்போதையை நிலை.
Mumbai Indians Probable XI: Rohit Sharma (c), Quinton de Kock (wk), Suryakumar Yadav, Ishan Kishan, Hardik Pandya, Kieron Pollard, Krunal Pandya, Adam Milne, Rahul Chahar, Jasprit Bumrah, Trent Boult
Punjab Kings Probable XI: KL Rahul (c/wk), Mayank Agarwal, Chris Gayle, Aiden Markram, Nicholas Pooran, Deepak Hooda, Harpreet Brar, Ravi Bishnoi, Mohammed Shami, Nathan Ellis, Arshdeep Singh
“ ஒரு பக்கம் புள்ளி பட்டியலில் முன்னேறி ப்ளே ஆப் வாய்ப்பினை தக்க வைக்க போராடும் மும்பை அணி, இனி வரும் போட்டிகளிலாவது ஒரு சில வெற்றிகளை இந்த சீசனில் அடைந்து விட வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கும் பஞ்சாப் அணி, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “