அனல் பறக்கும் வேகம், தெறிக்கும் ஸ்டம்புகள், இந்திய அணியில் இடம் பிடிப்பாரா உம்ரான் மாலிக்?
Umran Malik The Jammu Express
சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் உம்ரான் மாலிக் தற்போது அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார்.
நேற்று குஜராத்திற்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள், அதில் நான்கு விக்கெட்டுகள் போல்டு முறையில் எடுத்தவை. அவரின் வேகத்திற்கு சும்மா ஸ்டம்புகள் பறக்கின்றன. அவரின் திறமைக்கு நிச்சயம் வெகு விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார். நம்புவோம்.
“ 153 கி.மீ வேகத்தில் பந்து வீசும் போது பேட்ஸ்மேன் பேட்டை எடுப்பதற்குள் பந்து கீப்பரிடம் சென்று விடும். அந்த அளவிற்கு அந்த வேகத்தை அப்படியே ஓவர் முழுக்க தொடர்கிறார் அது தான் அவரின் ஸ்பெசல் “