அரையிறுதியில் பி வி சிந்து தோல்வி – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் பி வி சிந்து, சீன தைபேவைச் சேர்ந்த தாய் சு யிங்கிடம் தோல்வியுற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிபோட்டியில் இந்தியாவின் பி வி சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான சீன தைபேயின் தாய் சு யிங்கை எதிர் கொண்டார். அதிரடியாக விளையாடிய தாய் சு யிங் 21-18, 21-12 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி
இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதற்கு முன்பு இருவரும் நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் தாய் சு யிங் பதிமூன்று ஆட்டங்களிலும் சிந்து ஐந்து ஆட்டங்களிலும் வென்றிருக்கிறார்.முந்தைய ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளியை பெற்றுத்தந்த சிந்து இந்த ஒலிம்பிக்கில் அரையிறுதியில் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.நாளை நடைபெறும் வெண்கலத்திற்கான போட்டியில் சிந்து சீனாவின் ஹி பென்னை எதிர் கொள்கிறார்.
“ ஒருவரின் வெற்றியைக் கொண்டாடி தூக்கிப்பிடிக்கும் அதே ரசிகர்கள் தான் தோல்வியின் போது அவரை தேற்றவும் வேண்டும். தேற்றுவோம் மேலும் மெருகேற்றுவோம் “