ஒரு நாள் உலககோப்பை ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஸ்வின்?
Ashwin Back To World Cup ODI Squad Fact Here Idamporul
ஒரு நாள் உலக கோப்பை ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஸ்வினை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு சமநிலையான அணி இல்லாமல், உலக கோப்பைக்கே தகுதி பெறாத மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எல்லாம் இந்திய அணி தோற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அஸ்வின் போன்ற சீனியர் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து உலக கோப்பைக்குள் அணியை பலப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம்.
அஸ்வின் கடைசியாக இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் விளையாடி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆனாலும் கூட, அவர் டொமஸ்டிக் கிரிக்கெட், ஐபிஎல், டிஎன்பிஎல் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தன்னை நிரூபித்து தான் வருகிறார். அதனால் அவரை அணியில் இணைப்பது என்பது அணியை சமநிலைப்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“ மீண்டும் உலககோப்பையில் அஸ்வின் – ஜடேஜா இணைகள் விக்கெட்டுக்கள் சரிப்பதை காண ரசிகர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “