காயம் காரணமாக டி20 உலககோப்பையில் இருந்து விலகுகிறார் ரவீந்திர ஜடேஜா!
Ravindra Jadeja Set To Miss T20 WC
ஏற்கனவே ஆசிய கோப்பையில் இருந்து விலகிய ஜடேஜா தற்போது டி20 உலககோப்பையில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா முதலில் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதை சுட்டிக்காட்டி டி20 உலககோப்பையில் இருந்தும் ஜடேஜா விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய இழப்பாக இருக்கும், ஜடேஜா என்ற ஆல்ரவுண்டரை நிரப்ப இன்னொரு சரியான ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இல்லை என்பது தான் அதற்கான காரணம் “