ஐபிஎல் 2021 | மூன்றாவது அணியாக ப்ளே ஆப்-யிற்குள் நுழைந்தது பெங்களுரு!
RCB Win Against PBKS In IPL 2021 48th Match
ஐபிஎல் 2021-இன் 48 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து மூன்றாவது அணியாக ப்ளே ஆப்-யிற்குள் நுழைந்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.
முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 57(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மூன்றாவது அணியாக ப்ளே ஆப்-யிற்குள் நுழைந்திருக்கிறது பெங்களுரு.
பெங்களுரு தரப்பில் யுவேந்திர சஹால் நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதற்குபின் பஞ்சாப் அணிக்கு நான்காவது அணியாக ப்ளே ஆப்-யிற்குள் நுழையும் வாய்ப்பு சற்றே குறைந்திருக்கிறது.
“ சென்னை, டெல்லி, பெங்களுரு என மூன்று அணிகள் ப்ளே ஆப்-யில் இருக்கையில், நான்காவது அணிக்கு தான் கடும் போட்டி நிலவி வருகிறது “