ஐபிஎல் 2021 | ராஜஸ்தானை வென்றது பெங்களுரு அணி!
Glenn Maxwell Fiery Innings Against RR 43th Match Of IPL 2021
ஐபிஎல் 2021-இன் 43 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை வென்றது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லீவிஸ் 58(37), ஜெய்ஸ்வால் 31(22) ரன்கள் எடுத்த போதும் அடுத்தடுத்து வந்தவர்கள் பெரிதாய் ஜொலிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அதிரடியாக விளையாடி 17.1 ஓவர்களில் இலக்கை அடைந்தது.
பெங்களுரு தரப்பில் ஸ்ரீகர் பரத் 44(35) ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 50(30) ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இன்றும் 7 பவுலர்களை உபயோகித்து ஒரு கேப்டனாய் பவுலர்களை முக்கியமான கட்டத்திற்கு தேர்வு செய்வதில் பெரிதும் சொதப்புகிறார் சஞ்சு சாம்சன். இதுவே ராஜஸ்தானுக்கு பெரிய சரிவாய் அமைகிறது.
“ பெங்களுரு இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் தனக்கு ஒரு Safe ஆன இடத்தை தக்க வைத்து கொண்டது . ராஜஸ்தான் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ஏதாவது ஒரு வாய்ப்பை ராஜஸ்தான் அணியால் தேடிக்கொள்ள முடியும் “