உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் வேகமாக குணமடையும் ரிஷப் பண்ட்!
Rishabh Pant Recovering Faster For WC 2023 Idamporul
உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் ரிஷப் பண்ட் பயிற்சிகளை தீவிரமாக்கி வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
50 ஓவர் உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் மருத்துவ பயிற்சிகளை கடுமையாக மேற்கொண்டு வேகமாக ரிஷப் பண்ட் குணமடைந்து வருகிறாராம். இதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக ரிஷப் பண்ட் பயிற்சிகளை களைப்பில்லாமல் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ரிஷப் பண்ட் இல்லாத மிடில் ஆர்டர் இந்திய அணியில் கொஞ்சம் வீக்காக தான் இருக்கிறது. அதை ரிஷப் வந்து நிரப்பி விட்டால் நிச்சயம் இந்திய அணி 50 ஓவர் உலககோப்பைக்கு தயாராகி விடும் “