சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி மற்றும் ரோஹிட் ஷர்மா முற்றிலும் விலகலா?
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹிட் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் இருந்து ரோஹிட் ஷர்மா, விராட் கோஹ்லி, ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பிசிசிஐ-யின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐயோ நாங்கள் யாரையும் விலக சொல்லவில்லை என கருத்து தெரிவித்து வருகிறது.
ஒரு திறமையான அணிக்கு அனுபவமும் முக்கியம், அந்த வகையில் இதையெல்லாம் முன்னரே யோசித்து பிசிசிஐ அணியையும் ஒரு இளம் தலைமையையும் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலையான ஒரு அணியே இல்லாத போது சீனியர் பிளேயர்களும் விலகி விட்டால் அணியின் எதிர்காலம் சீர்கெட்டு போகும்.
“ ஒவ்வொரு தொடருக்கும் ஒரு கேப்டன் என்று தெரிந்து எடுத்துவிட்டு இளைஞர்களை யாரு வளர்த்தும் விடாமல், தற்போது சீனியர் பிளேயர்களின் மீதும் பிசிசிஐ அழுத்தம் கொடுத்தால் இந்திய அணி இனி சர்வதேச போட்டிகளில் காணாமலே போனாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர் “