காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹிட் விலகல்!
Rohit Sharma Has Been Ruled Out Of South African Test Series
காயத்தின் காரணமாக வருகின்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹிட் சர்மா விலகி அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற டிசம்பர் 26 அன்று துவங்க இருக்கும் நிலையில், இந்தியாவின் நட்சத்திர வீரரான ரோஹிட் சர்மா காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். இதற்கு முன்பே தொடர் காயங்களால் பல்வேறு டெஸ்ட் சீரிஸ் வாய்ப்புகளை இழந்து இருக்கிறார் ரோஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
“ ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில், டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹிட் விலகி இருப்பது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது “