ரோஹிட் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன் மட்டும் அல்ல, அவர் சிறந்த மனிதர் – அஷ்வின்
ரோஹிட் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன் மட்டும் அல்ல, அவர் சிறந்த மனிதனும் கூட என்று ரவிச்சந்திரன் அஷ்வின் வீடியோ ஒன்றில் உருக்கமாக கூறி இருக்கிறார்.
முக்கியமான ஒரு தொடரின் நடுவே, என்னை வந்து சேர்ந்தது என் தாயின் உடல் நிலை சேதி, அந்த சமயத்தில் நான் மிகவும் மன வருத்தத்தில் உடனடியாக செல்வதற்கு ஆன்லைனில் ஏதேனும் பயணிகள் விமானத்தில் இடம் இருக்கிறதா என தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது ரோஹிட் பொறுமையாக என் அருகில் வந்து அமர்ந்து எனக்காக தனி விமானம் ஏதும் கிடைக்குமா என தேடிக் கொண்டு இருந்தார்.
வீரர்களை சிறப்பாக வழி நடத்துவது மட்டுமன்று, அவர்களின் மனநிலை, சூழல்களை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல, அவர்களுக்காக மெனக்கெடுவது என்பதை ஒரு சில கேப்டன்களே செய்வார்கள். அதனால் தான் சொல்கிறேன் ரோஹிட் சிறந்த கேப்டன் மட்டும் அல்ல, ரோஹிட் சிறந்த மனிதரும் கூட என அஷ்வின் வீடியோ ஒன்றில் உருக்கமாக கூறி இருக்கிறார்.
“ அஷ்வின் 100 ஆவது போட்டியின் போது அனைவருக்கும் கை கொடுத்து விட்டு, ரோஹிட்டை மட்டும் ஏன் கட்டி அணைத்தார் என்பதற்கான காரணம் இதன் மூலம் விளங்குகிறது. தலைமைப் பண்போடு இந்த நட்பும் மேலும் தொடரட்டும் “