நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரோஹிட் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!

Rohit Sharma Officially Named As Captain For NewZealand T20 Series

Rohit Sharma Officially Named As Captain For NewZealand T20 Series

நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் ரோஹிட் தலைமை பொறுப்பை ஏற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

டி20 உலககோப்பைக்கு பிறகு விராட் கோலி கேப்டன் பொறுப்பை துறப்பதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தாக நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரோஹிட் சர்மா தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி 17 நவம்பர் 2021 அன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. அதற்கு அடுத்ததாக இரண்டாவது போட்டி 19 நவம்பர் அன்று ராஞ்சி மைதானத்திலும், கடைசி போட்டி 21 நவம்பர் அன்று கொல்கத்தா மைதானத்திலும் நடக்க இருக்கிறது.

India’s T20I squad: Rohit Sharma (Captain), KL Rahul (Vice-Captain), Ruturaj Gaikwad, Shreyas Iyer, Suryakumar Yadav, Rishabh Pant (wicket-keeper), Ishan Kishan (wicket-keeper), Venkatesh Iyer, Yuzvendra Chahal, R Ashwin, Axar Patel, Avesh Khan, Bhuvneshwar Kumar, Deepak Chahar, Harshal Patel, Mohammed Siraj

” கிட்ட தட்ட பழி வாங்குவதற்கென்றே வைத்தால் போல இருக்கும் இந்த டி20 தொடரில், இந்திய அணி பழி வாங்க போகிறதா, இல்லை மொத்தமாய் தன்னை பலி கொடுக்க போகிறதா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

About Author