இனி ஒரு நாள் போட்டிகளுக்கும், டி20 போட்டிகளுக்கும் ரோஹிட் சர்மாவே கேப்டன் – தேர்வு கமிட்டி அதிரடி
Rohit Sharma Officially Named As Captain For ODI And T20 Format
இனி இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிகளுக்கும், டி20 போட்டிகளுக்கும் ரோஹிட் சர்மாவே கேப்டனாக திகழ்வார் என்று தேர்வு கமிட்டி அதிரடியாக அறிவித்து இருக்கிறது.
டி20 உலக கோப்பைக்கு பிறகு தனது டி20 கேப்டன்சிப்பை விராட் கோலி துறந்திருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன்சிப்பும் விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹிட் சர்மாவுக்கு அதிகாரப்பூர்வமாக கேப்டன் பதவியை வழங்கி இருக்கிறது இந்திய சீனியர் தேர்வுக் குழு.
“ ஐபிஎல்லில் ரோஹிட் சர்மா சிறந்த யுக்தியை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ்க்கு பலமுறை கோப்பையை கைப்பற்றிக் கொடுத்து இருக்கிறார். அந்த யுக்தி ஒரு நாள் போட்டிகளுக்கும் சரிபட்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “