ஒட்டு மொத்தமாக கால்பந்து ஆட்டத்திற்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் ரொனால்டோ!
Cristiano Ronaldo HD Wallpaper Idamporul
காலிறுதியில் மொரோக்கோவுடனான தோல்வியினால், ரொனோல்டோ கால்பந்து ஆட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக ஓய்வு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மொரோக்கோவுடனான காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் தோல்வியுடன் வெளியேறியது மட்டும் அல்லாமல், கடைசி இரண்டு ஆட்டங்களில் ரொனோல்டோவை பெஞ்சில் அமர்த்தியது அவரையும் சரி அவரது ரசிகர்களையும் சரி மிகவும் காயப்படுத்தியதால் ரொனால்டோ ஒட்டு மொத்தமாக கால்பந்திற்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இந்த கால்பந்து உலககோப்பையோடு பெரும்பாலான கால்பந்து ஜாம்பவான்கள் ஒட்டு மொத்தமாக கால்பந்திற்கு முழுக்கு போடுவார்கள் என்று அறியப்படுகிறது “