ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

RR VS RCB IPL 2021 43th Match Starts Today

RR VS RCB IPL 2021 43th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 43 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.

விறுவிறுப்பான ஐபிஎல்-லின் 43 ஆவது போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியானது, விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர் கொள்ள இருக்கிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் தனது மூன்றாவது இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடப்போகும் பெங்களுரு அணி, முதல் நான்கு இடத்திற்குள் தகுதி பெற இனி வரும் அனைத்து போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, இரு அணிகளும் தங்கள் நெருப்புகளை, களத்தில் இறக்கி, இன்று அனல் பறக்க ஒரு போட்டியை கொடுத்தால், அதுவே ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாய் அமையும்.

Rajasthan Royals Probable XI: Evin Lewis, Yashasvi Jaiswal, Sanju Samson (c & wk), Liam Livingstone, Mahipal Lomror, Riyan Parag, Rahul Tewatia, Chris Morris/Tabraiz Shamsi, Chetan Sakariya, Jaydev Unadkat/Sheyas Gopal, Mustafizur Rahman

Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli (c), Devdutt Padikkal, Srikar Bharat (wk), Glenn Maxwell, AB de Villiers, Shahbaz Ahmed, Daniel Christian, Kyle Jamieson, Harshal Patel, Mohammed Siraj, Yuzvendra Chahal

“ சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேனாய் பார்முக்கு வந்தாலும், ஒரு கேப்டனாய், குறிப்பிட்ட ஓவர்களில், எந்தெந்த பவுலரை எப்படி தேர்வு செய்வது, என்பதிலும் தேர்ச்சி பெற்றுவிட்டால், வெற்றி வாய்ப்பினை பெறலாம் “

About Author