இந்திய அணி 12 தொடர் வெற்றிகளுக்கு பின்னர் 2 தொடர் தோல்வி! தோல்விக்கு என்ன தான் காரணம்?
Second T20 SA vs IND South Africa Won By 4 Wickets
நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது.
டி20 போட்டிகளில் 12 தொடர் வெற்றிகளுக்கு பின்னர், 13 ஆவது வெற்றியை நோக்கி பயணித்த இந்திய அணி சொந்த மண்ணிலேயே தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் சறுக்கி தோல்வியை தழுவி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ்வை இணைத்து, புவனேஸ்குமார்க்கு இணையாக இன்னொரு பவுலரை சேர்த்து இருந்தால் அணி கொஞ்சம் கட்டு கோப்பாக இருந்திருக்கும்.
“ ரிஷப் பண்ட்க்கு கொஞ்சம் பொறுப்பை இறக்கி வைத்து விட்டு அவரை அவர் பாணியில் ஆட விடலாம், அதுவே அணிக்கு பலனை தரும் “