சர்ப்ராஸ் கான் விஷயத்தில் பிசிசிஐக்கு குவிந்து வரும் எதிர்ப்புகள்!
Why Sarfraz Khan Not Selected In Indian Team BCCI Explanation Idamporul
சர்ப்ராஸ் கான் விஷயத்தில் விளக்கம் கொடுத்த பிசிசிஐ-க்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.
37 முதல் தர போட்டிகளில் 13 சதம், 9 அரை சதம் என்று எல்லா விதத்திலும் சரியான பிளேயராக தென்படுகிறார் சர்ப்ராஸ் கான், ஆனால் அவரது செலக்சனில் அவருக்கு உடல் தகுதி இல்லை, அதிக கோபம் காட்டுகிறார் என்று பிசிசிஐ சப்ப கட்டு கட்டுகிறது. ஐபிஎல் வைத்தே தற்போதெல்லாம் செலக்சன் நடைபெறுவதால், எதற்கு முதல் தர போட்டிகள் என்று பிசிசிஐயை பலரும் சாடி வருகின்றனர்.
“ உடல் தகுதி தான் பிரச்சினை என்றால் ரோஹிட், ரிஷப் பண்ட் எல்லாம் எப்படி அணியில், கோபம் தான் பிரச்சினை என்றால் விராட், சிராஜ் எல்லாம் எப்படி அணியில் என ரசிகர்களும் சாடி வருகின்றனர் “