கண்ணீர் மல்க விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ்!
ரசிகர்களுக்கும், வீனஸ் வில்லியம்ஸ்க்கும் நன்றி தெரிவித்துவிட்டு கண்ணீர் மல்க விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ்.
40 வயதாகும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அமெரிக்க ஓபன் தான் தன்னுடைய கடைசி விளையாட்டாக இருக்கும் என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை டாம்லஜனோவிக்குடன் 7-5, 6-7, 6-1 என்ற கணக்கில் தோல்வியுற்று கண்ணீர்மல்க பிரியா விடைபெற்றார்.
“ 23 கிராண்ட்ஸ்லாம், 4 ஒலிம்பிக் பதக்கங்கள் என்று யாராலும் தொட முடியாத உச்சத்துடன் விடைபெறுகிறார் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் “