டி20 உலகோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ள ’Lord’ ஸ்ரதுல் தாக்கூர்!

Shardul Thakur Added In The Squad Of T20 World Cup

Shardul Thakur Added In The Squad Of T20 World Cup

டி20 உலககோப்பை இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில், அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஸ்ரதுல் தாக்கூர் மெயின் ஸ்குவடில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய ஸ்ரதுல் தாக்கூர், அதே கையோடு ஐக்கிய அரபு அமீரகம் வந்து, ஐபிஎல்-லின் இரண்டாவது பாகத்திலும் கலக்கி வரும் நிலையில், அடுத்து நடக்கவிருக்கும் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியிலும் மெயின் ஸ்குவடில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா அணிக்காக அபாரமாக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர், கடந்த சில தினங்களுக்கு முன் தான், டி20 உலகோப்பைக்கான அணியில், டீம் அசிஸ்டாக சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது ஸ்ரதுல் தாக்கூரும் மெயின் ஸ்குவடில் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

India’s squad for ICC T20 World Cup: Virat Kohli (captain), Rohit Sharma (vice-captain), KL Rahul, Suryakumar Yadav, Rishabh Pant (wicket-keeper), Ishan Kishan, Hardik Pandya, Ravindra Jadeja, Rahul Chahar, Ravichandran Ashwin, Shardul Thakur, Varun Chakravarthy, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Mohammad Shami

Stand-by players: Shreyas Iyer, Deepak Chahar, Axar Patel

Team Assists: Avesh Khan, Umran Malik, Harshal Patel, Lukman Meriwala, Venkatesh Iyer, Karn Sharma, Shahbaz Ahmed and K. Gowtham

” எல்லாமே இனி தான் நல்லா தான் நடக்கும், பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும், இவ்வளவு நாள் இதே கிரவுண்டில் பழக்கப்பட்டு விளையாடிய இந்திய அணி, உலக கோப்பையில் சிறப்பான டாக்டிக்ஸ்சுடன் சிறப்பாக செயல்படும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம் “

About Author