சிங்கப்பூர் ஓபன் பைனலில் சிந்து அசத்தல், சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து!
சிங்கப்பூர் ஓபன் பைனலில் அதிரடியாக விளையாடி 2-1 என்ற செட் கணக்கில் சீன வீராங்கணையை தோற்கடித்து பட்டம் வென்றால் பி வி சிந்து.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை ஜி யி வாங்கை எதிர்கொண்ட பி வி சிந்து, முதல் செட்டை எளிதில் 21-9 என்று கைப்பற்றினாலும், அடுத்த செட்டில் 11-21 என்று ஜி யி வாங் பதிலடி கொடுத்தார். அதற்கு அடுத்து சுதாரித்து ஆடி 21-15 என்ற கணக்கில் பி வி சிந்து அதிரடி காட்டி ஜி யி வாங்கை வென்று பட்டம் வென்றார்.
“ இந்த வருடத்தில் பி வி சிந்து சூடும் மூன்றாவது பட்டம் இதுவாகும். தொடர்ந்து பல சாம்பியன் பட்டங்களை அவர் அள்ள வேண்டும் “