நான் சில சமயங்களில் ருதுராஜிடம் என்னை பார்க்கிறேன் – தோனி

I Am Seeing Me In Ruturaj Gaikwad Sometimes Idamporul

I Am Seeing Me In Ruturaj Gaikwad Sometimes Idamporul

நான் சில சமயங்களில் ருதுராஜ் கெயிக்வாடிடம் என்னை பார்க்கிறேன் என மகேந்திரசிங் தோனி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இந்த ஐபிஎல் சீசன் துவங்கும் முன்னதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை தோனி இறக்கி வைத்து விட்டு, அதனை ருதுராஜ் ஜெயிக்வாடிடம் ஒப்படைத்தார். பலருக்கும் இந்த முடிவு அதிர்ச்சியை அளிப்பதாக இருந்திருந்தாலும் கூட, ருதுராஜ் தொடர்ந்து இரு வெற்றிகளை பெற்று தன்னை நிரூபித்து இருக்கிறார்.

தோனி அவ்வளவு சீக்கிரத்தில் எந்த வீரரையும் காரணம் இல்லாமல் பெரிய இடத்தில் தூக்கி வைப்பதில்லை. அவர் என்ன செய்தாலும் ஒரு காரணம் இருக்கும். பல இக்கட்டான தருணங்களில் ருதுராஜ் நடந்து கொள்ளும் விதங்களில் அவர் அவரையே பார்ப்பது போல இருக்கிறது என தோனி ருதுராஜ் குறித்து பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

“ நிச்சயம் ருதுராஜ், தோனி உருவாக்கிய சிஎஸ்கே என்னும் சாம்ராஜ்யத்தை தோனிக்கு பின்பு இன்னும் ருதுராஜ் விரிவு படுத்துவார் என நம்புவோம் “

About Author