ஐபிஎல் 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது கொல்கத்தா!
SRH VS KKR IPL 2021 49th Match Starts Today
ஐபிஎல் 2021-இன் 49 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இன்றைய இரண்டாவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
இதுவரை இருஅணிகளும் நேருக்கு நேர் மோதிய 20 போட்டிகளில், 17 போட்டிகளில் கொல்கத்தாவே வென்று முன்னிலை வகிக்கிறது. இருந்தாலும் ப்ளே ஆப் போட்டிக்களத்தில் நீடிக்க வேண்டுமெனில், கொல்கத்தா இன்றைய போட்டியில் எப்படியேனும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை பொறுத்தவரை எந்த வித ப்ரஸ்சரும் இல்லாமல் இந்த போட்டியில் விளையாடலாம்.
Kolkata Knight Riders Probable XI: Shubman Gill, Venkatesh Iyer, Rahul Tripathi, Eoin Morgan (c), Nitish Rana, Dinesh Karthik (wk), Tim Seifert/Shakib al Hasan, Sunil Narine, Shivam Mavi, Tim Southee, Varun Chakaravarthy
Sunrisers Hyderabad Probable XI: Jason Roy, Wriddhiman Saha (wk), Kane Williamson (c), Priyam Garg, Abhishek Sharma, Abdul Samad, Jason Holder, Rashid Khan, Bhuvneshwar Kumar, Siddarth Kaul, Sandeep Sharma
“ நான்கு அணிகள், மிச்சமிருப்பது ஒரே இடம், இப்போது தான் இந்த ஐபிஎல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது “