ஆகாஷ் மத்வால் சிஎஸ்கேவில் இருந்திருந்தால் அவரது பவுலிங் கிரெடிட் தோனிக்கு போய் இருக்கும் – கவாஸ்கர்

Sunil Gavaskar Controversial Speech About Dhoni Idamporul

Sunil Gavaskar Controversial Speech About Dhoni Idamporul

ஆகாஸ் மத்வால் மட்டும் சிஎஸ்கேவில் இருந்து இருந்தால் அவரது ஒட்டு மொத்த பவுலிங் கிரெடிட்டும் தோனிக்கு போய் இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் ஒரு சர்ச்சையான பதிலை கூறி இருக்கிறார்.

லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், நல்ல வேளை ஆகாஷ் சிஎஸ்கேவில் இல்லை, இருந்திருந்தால் அவரது ஒட்டு மொத்த பவுலிங் கிரெடிட்டும் தோனிக்கு போய் இருக்கும் என்று நக்கலாக தோனியை சாடி இருக்கிறார்.

“ தோனியை பொதுவெளியில் நன்றாக நடத்துவதும், தனிப்பட்ட முறையில் சாடுவதும் ஒரு சில சீனியர் வீரர்கள் தொடர்ச்சியாக செய்து வருவது தான், ஆனால் தோனி இதையெல்லாம் எப்போதும் பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே “

About Author