தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சொதப்பும் சூர்ய குமார் யாதவ்!
Suryakumar Yadav Continuous Two Ducks In ODI Series Idamporul
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் தொடர்ந்து இரண்டு டக்குகள் என சூர்ய குமார் யாதவ் அவர்களின் பார்ம் இந்திய அணியில் அவரின் இடத்தை கேள்விக் குறியாக்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் சூர்ய குமார் யாதவ் தொடர்ந்து இரண்டு டக்குகளால் ஸ்கோர் கார்டை நிரப்பி இருப்பதால் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடுவது என்பது கேள்வி குறியாகி இருக்கிறது.
“ என்ன தான் டி20களில் அதிரடி காட்டினாலும், ஒரு நாள் போட்டி களமும், டெஸ்ட் களமும் வேறு வேறு, அவர் இன்னும் பயிற்சிகள் மேற்கொண்டு அவர் ஆட்டத்தை மாற்றி அமைத்தால் வாய்ப்புகள் கிடைக்கலாம் “