சையது முஸ்டாக் அலி ட்ராஃபி | கர்நாடகாவை அதிரடியாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தமிழ்நாடு!
சையது முஸ்டாக் அலி ட்ராஃபி இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை அதிரடியாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது தமிழ்நாடு.
சையது முஸ்டாக் அலி ட்ராஃபியின் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய கர்நாடகா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தமிழ் நாடு அணியினருக்கு கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது ஷாருக்கான் ஒரு சிக்ஸ் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கடைசிவரை களத்தில் நின்ற ஷாருக்கான் மூன்று சிக்ஸ்சர்கள், ஒரு போருடன், 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். மனிஷ் பாண்டே, கருண் நாயர் போன்ற அனுபவ வீரர்கள் இடம் பெற்றிருக்கும் கர்நாடகா அணியை அதிரடியாக வீழ்த்தி தனது மூன்றாவது சையது முஸ்டாக் அலி ட்ராபியை கைப்பற்றி இருக்கிறது தமிழக அணி.
” கடைசி பால் பினிசிங்கில் கிட்ட தட்ட தல தோனியை கண்முன் நிறுத்தினார் நமது தமிழக வீரர் ஷாருக்கான் “