ஆஸ்திரேயாவிற்கு எதிரான டி20 தொடரில் ஷமிக்கு பதில் உமேஷ் யாதவ் களம் இறங்குகிறார்!
Aus Series Umaesh Yadav Replacing Shami
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில், கோவிட் காரணமாக ஷமி விலகவே உமேஷ் யாதவ் அணியில் இணைந்து இருக்கிறார்.
ஆஸ்திரேயாவிற்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில், முகமது ஷமி கோவிட் காரணமாக விலகவே, அவருக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார். சமீபத்திய வெளிநாட்டு தொடர்களின் உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தால் அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
“ ஷமியின் இடத்தை உமேஷ் யாதவ் பிடித்து இருந்தாலும், தனது பவுலிங் திறனை காட்டி நிரந்தர இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “